Saturday 10 July, 2010

18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

,




18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு – வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் - 16 ஜூலை - 2010.


ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NATIONAL CHILDREN'S SCIENCE CONGRESS) டிசம்பர் 27 முதல் 31 வரை தேசிய அளவில் இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனை குழுமத்தினால் (NCSTC-Network) நடத்தப்படுகின்றது. இந்தியா முழுவதிலும் உள்ள 10 முதல் 17 வயது வரை உள்ள குழந்தைகள் இதில் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இம்மாநாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ( TNSF) தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமத்துடன் (TNSCST) இணைந்து ஒருங்கிணைக்கின்றது.

3 - 5 பேர் கொண்ட மாணவர் குழுக்கள் (10 முதல் 13 வயது வரை – இளநிலை; 14 முதல் 17 வயது வரை – மேல்நிலை) ஒரு வழிகாட்டி ஆசிரியரின் கீழ் 2 - 3 மாதங்கள் ஓய்வு நேரத்தில் ஆய்வுகள் செய்து மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடைபெறும் மாநாடுகளில் சமர்ப்பிக்கலாம். இந்த ஆண்டு ஆய்வுக்கான கருப்பொருள் “நிலவளங்கள் : வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காக பாதுகாப்போம்”. இதற்கென வடசென்னை மாவட்ட அளவில் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் திட்டமிடப்பட்டுள்ளது.

நாள் : ஜூலை 16, 2010
நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: I.C.F. சில்வர் ஜூபிளி மேல்நிலைப்பள்ளி,
கம்பர் அரங்கம் பேருந்து நிறுத்தம் ( I.C.F. ஸ்டேடியம் எதிரில்)
I.C.F. இரயில் பெட்டித் தொழிற்சாலை, சென்னை - 38

தங்கள் பள்ளியிலிருந்து 2 அல்லது 3 வழிகாட்டி ஆசிரியர்களை இம்முகாமிற்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம். பங்கேற்போர் பட்டியலை முன்கூட்டியே தெரிவிக்கும்படி வேண்டுகிறோம்.

18th National Children’s Science Congress (NCSC) Guide teacher workshop on 16th July -2010.
----------
Vanakkam. National Children’s Science Congress - NCSC is conducted every year by National Council for Science and Technology Communication –NCSTC, Dept., of Science and Technology (DST) Govt. of India for the children in the age group of 10 to 17 years from all over the country. TamilNadu Science Forum – TNSF is the TamilNadu State coordinator of NCSC for the past 18 years.
NCSC is conducted for students in the age group of 10 to 13 years (juniors) and 14 to 17years (seniors). Student groups comprising 3 to 5 students do research projects during their free time for 2-3 months on a topic related to the focal theme under the guidance of a Guide teacher. This year’s focal theme is “Land Resources: Use for prosperity; Save for posterity”.
To enlighten the guide teachers on the focal theme, Tamil Nadu Science Forum, North Chennai District is organising a workshop for them. The Guide teacher workshop for NCSC 2010 will be held on 16th July 2010 from 9.30am to 5pm at, ICF Silver Jubilee matriculation higher Secondary School, (opp. ICF stadium, Kambar Arangam bus stop), ICF, Chennai - 38.
We request you to send 2 or 3 teachers who have interest in guiding your students in doing NCSC projects, for this guide teacher workshop. Please inform the list of participants in advance to us. Thanking you.

For further details please contact:
Mr.Krishnamoorthy- -- 9444816352
Mr.Dhanasekar-----------9940255480
Mrs.Themozhi chelvi, - 9003160856
Mrs Chandrasekar--------9444413568

Address for communication:
No.1-C, Vandhana Apartments, Rajeswari street, Perambur, Chennai – 600011